Tamil Kavithai தமிழ் கவிதைகள்

 Guys  Send U R  Tamil Kavithai (தமிழ் கவிதைகள்) to our mail id and it will be PUBLISH WITH IN 24 hrs with ur name........ Send to : ganeshbect@gmail.com Format: Name* Email* Title* Other

சொல்லாத காதல்

எனை வெட்௧ம் ௧ொள்ள வைத்த
௨ன் ௧ள்ளப்பார்வைகள்
பாஷைகள் ஏதுமின்றி பேசக்கற்று கொடுத்த
உன் மின்சார விழி௧ள்
திட்டாமல்அழவைத்தாய்
உன் நினைவுகளில் என் புன்ன௧ை பூ௧்௧ச்செய்தாய்
எல்லாமே உணர்த்தியன உன் காதலை
உனது தாமதத்தை தயக்கமா௧வே நினைத்தேன்
எனை வைத்து புதிரொன்று விளையாடினாயடா
இன்று வரை பதில் தெரியாமல் தவி௧்௧ிறேன்.....
விடைசொல்வாயா?
RAM.G

கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள்



 கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள்.
இரவிலே உந்தேன் சேலையுடன்
தூங்குகிறேன். கண்களை மூடினாலும்,
திறந்தாலும் கண்ணீர் சிந்தல்,
உன் பெயரை சொல்லத்துடிக்கும்
என்றேன் இதழ்கள், உன்னிடம்
வரத்துடிக்கும் எந்தன் பாதங்கள்
உயிரிருந்தும் ஜடமானேன்.

தூக்கமில்லாத பித்தனாய் நம்
காதல் நாவலை தேடுகிறேன்.
இன்பம் நிறைந்த பக்கங்களை
காணவில்லை. அழுகை மனதை
கொல்கிறது. கடைசியாக உன்
முகத்தை கோளமிட்ட அரைத்த
சந்தனமும், நெற்றியில் பட்ட
மணக்கும் குங்குமமும் உன்
பிரிவுக்கு என் மருந்தாய். உன்
கூந்தில் வைத்த காய்ந்த மல்லிகை
பூவிற்கு வாசம் போகவில்லை.
நீயே பிரிந்து விட்டாய்......!

உன் முகம் காணத்துடித்து என்
நோட்டுக்களை வீசினேன், உன்
புகைப்படம் கையிலே......!
கண் இமையாது பார்க்கிறேன்.
உனக்கு பிடித்த பூந்தோட்டத்தில்
நான் தனிமை கொண்டால் அவை
கோபிக்கின்றன.நிஜத்தில் நீ இல்லை.
எண்ணத்தால் உன் புகைப்படத்தை
நெஞ்சோடு இறுக கட்டியணைத்து
நிற்கிறேன். அந்த பூக்கள் தாலாட்டியது
தேனால்......, உன்னங்கையை திறந்து
பார்க்கிறேன். நம் கல்யாணத்தாலி அன்று
என்னிடம் தந்தது இன்றுவரை.......,

எம்மை அறிமுகம் செய்த மழையால்
ஒதுங்கிய மரத்தடியிற்கு செல்கிறேன்.
மரத்தடியில் உன் கைகள் என் மீது பட்ட
நொடியை நினைக்கிறேன். கோடையிலும்
என் தேகத்தை பனித்துளி நளைக்கின்றன.
ஆனால் இதயத்தாகம் தீரல்லையே..!

அன்னையிடம் ஒடோடிச் சென்றேன்.
என் சிவந்த நயனங்களை கண்ட
என்னை ஈன்றாள் கண்கள் கலங்கி
அவள் மடியிலே துயில வைத்தாள்.
இந் நினைவு என்னை சிறு பிள்ளையாக்கியது..
நான் இன்றும் குழந்தையாக இருந்திருந்தால்
அன்னையின் மடியிலே தூங்கியிருப்பேன்.
இமைகள் என் அம்மாவின் தாலாட்டால்
அறியாமல் தூங்கினாலும் கண்ணீர் ஓயவில்லை....,

என்னை விட்டு நீ தனிமையில் நிம்மதி
காணும் இடத்திற்கு வருகிறேன்.
மலர்களால் சிரிக்கும் ஒவ்வொரு அங்கங்களும்
மண்துணிக்கைக்கு இரையாகின்றன.

ஓடோடி என்னிடம் வா என்கிறாய்.
காதலிக்கும் போது ஒரு முத்தம் தர
வெட்கப்பட்டாய்.இன்று எனை உன்
மடியில் துயில வைத்து ஓராயிரம்
தடவை இதழை பதிக்கின்றாய்.
தாலாட்டு சுகமானது, தூக்கமும்
வாழ்வில் இல்லாத எனக்கு முதல்
தடவை ஒரு நீண்ட தூக்கம் அவளுடன்.....
GANESH.R

naan

pathu madham ennai maraitha ammavaium,
pathu madham ennai kaana thuditha appavaium,
kaana nan oda odi vanda naal 
indru ungal maganai indha ulagilaey....  
 இப்படிக்கு,
ராஜ் ராஜேஷ்.

ஒருவரி கவிதைகள்

ரசிக்கவில்லை - இழவு வீட்டில் குழந்தைகளின் சிரிப்பை !

நனையவில்லை - கண்ணீரஞ்சலி போஸ்டர் !

இளமை - முதுமையின் தாய் !

தனிமை - பிரிவில் அது கொடுமை !
தனிமை - இணையில் அது இனிமை !

சேமிப்பு - ஆசைகளின் துறவு !

சந்திப்பு - பிரிவின் முயற்சி !

வெற்றி - வியர்வையின் விளைச்சல் !

தோல்வி - முயற்சியில்லாதபோது !

தாய்பால் - கலப்படமில்லை வறுமையிலும் !

தண்டனை - தவறுகளின் பிள்ளை !

மனிதன் - நாளைய பிணம் !

உயிர் - காற்றுள்ளவரை !

காமம் - மனத்தின் வலி கண்ணின் வழியே !

பண்பாடு - இளமையில் கூச்சல் !

காதல் - பருவ காய்ச்சல் !
 இப்படிக்கு,
பூவிதழ்

 

தரிசனம்

தரிசனம் 

கோடி யுகம் காத்திருக்கும்
என் கண்களுக்கு...
நொடி பொழுது தரிசனம்
உன் முகம்.... !
 இப்படிக்கு, 

மகு.

தாய்
உயிருக்குள் உயிராக எனை சுமந் தாய்
உனது உதிர ஊற்றிணை தாய்ப் பாலாக ஊற்றியெனை உயிர்காத் தாய்
உனது உறக்கத்தை எனது தலையணையாக்கி மடியில் உறக்கம் தந்.. தாய்..
தாயே.. நீ உயிருக்குள் சுமப்பதை நிராகரித்தால்
இந்த பூமியை காணாமல்
மரித்து இருப்போம் உயிரனுவாக..
இந்த பூமி மலடியாகி இருக்கும் மனிதர்கள் இல்லாமல்..
இப்படிக்கு, 
ரிஸ்வான்


விடியும்போது மறவாதே

தன்னம்பிக்கையில் காலூன்றி
தலைதூக்கும் முயற்சியால்
உழைக்கத் துடிக்கையில்
தொல்வியால் தடைவரும்
தவாழதுக் கடந்தால்
வெற்றியேனும் இலக்கை
தொடுகையில் சோர்ந்து
விடியும்போது மடியாதே

இப்படிக்கு,
சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்


தலை நிமிரட்டும் பண்பாடு





எண்ணங்கள் மாறினால்
வண்ணமாகும்வளர்ச்சி
பண்பாடு மாற்றம்
மாறுபடும் கலச்சாரம்
தலை நிமிரும்
தமிழர் பண்பாடு
காற்பதே உன்பாடு
எடுத்திடு உடன்பாடு
அழகின் தோற்றம்
ஆடைகள் மெருகேற்றும்
உடைகள் மாற்றம்
உகந்ததல்ல ஏற்றம்
வரவேற்கும் மாண்பும்
விருந்தாகும் மருந்தும்
விஞ்ஞானத்தால் மறந்தும் உறவுகளை துறந்தும்
வாழ்வதல்ல வாழ்க்கை வாழ்வோடு கலச்சாரம்
ஒருநாளும் மறவாதே ஒன்றியே இருக்கட்டும்.


இப்படிக்கு,
சமத்துவபுறா.ஞான.அ.பாக்யராஜ்


Ventru  vidukintrana
Unnai verukka ninaikum 
 oru nodiyai
 Unnai virumbiya aayiram nodikal
             ventru vidukinrana...........

                                                                                                                                      இப்படிக்கு,

                                                                                                                                         கவிதா

காதலர் தினத்தன்று உன்னை


நிச்சயமாக
காதலர் தினத்தில்
உனக்கு பரிசு தர மாட்டேன்

வாழ்த்து சொல்ல மாட்டேன்
அன்றைய தினத்தில்
உன்னை பார்க்க கூட
மாட்டேன்

அதெல்லாம் சராசரி
காதலர்களுக்கு....
அத்தனை எல்லையையும்
கடந்து
எந்த கட்டுக்குள்ளும்
வராத
ஆழ்ந்த காதல் எனது.....
அதற்க்கு ஏன்
காதலர் தின வாழ்த்து
சொல்ல வேண்டும்?? 
இப்படிக்கு,
சாந்தி 

நினைவுகள்

நினைவுகள்

அவனும் நானும் காலார திரிந்த
வீதிகளில் பயணப்படுகிறேன்
தொலைந்த நண்பனின் நினைவுகளை தொடர...
இப்படிக்கு,
- வெ. ஆதன் மணி

நண்பர்கள் 

விழிகளில் வழிந்திடும்
கண்ணீர் ...
இதயத்தை நனைத்திடும்
முன்னே ...
விரைந்து துடைத்திடும்
விரல்கள்!

 

  இப்படிக்கு,
 ரோஜா மீரான்

திரும்பி பார்க்க வைக்கும் நினைவுகள் 

ஒவ்வொரு வரிகளும் நீண்டு செல்கிறது

ஒவ்வொருவரையும் நினைக்கும் போது

தொலைந்து விட்டது என்று நினைத்தால்

தொடுவானத்தில் நிக்கிறது காதல்

அறிமுகமானவர்கள் சிலர்

அன்பாக இருக்கும் போது

அருகில் இருந்தவர்களை

சில நேரம் மறக்கிறோம்

அறிமுகமானவர்கள் பலர்

நம்மை வெறுக்கும் போதுதான்

அருகில் இருந்தவர்களின் அன்பு

நம் கண்கள்வழியே கண்ணீராக தோன்றுகின்றனர்

சில நேரம் அழுகிறோம்

சில நேரம் சிரிக்கிறோம்

சில நேரம் நம்மையே கூட மறக்கிறோம்

வாழ்க்கை எங்கு சென்றாலும்

சிலருக்காகவே நாம் திரும்பிபார்க்கிறோம்.....

அது நட்பாகாகவும் ,காதல்க்காகவும் ,

அன்புக்காகவும் மட்டும்தான் இருக்கநேரிடும்..!!! 
                                                                                                                      இப்படிக்கு, 
                                                                                                                                                  காந்தி
 

நட்பின் வண்ணங்கள்

கவலைப் படுகையில் நண்பன்
கட்டிய ராக்கிக் கயிறு
மனசுக்குள் இதமாய் ஆறுதல் வார்த்தைகள்.....
வண்ணங்கள் விழிகளில் அல்ல
வாழ்த்துகின்ற மனங்களில் என்று புரிந்தது 
                                                                                                                      இப்படிக்கு,
                                           ஹரி ஹர நாராயணன் 

உயிரில் கலந்த நட்பு

தோளிலே
கைபோட்டுக் கொண்டது

நிறுத்தி வைக்கப்பட்ட
நண்பர்களின் மிதி வண்டிகள் 
                                                                                                                        இப்படிக்கு,
ஹரி ஹர நாராயணன் 

நண்பா

 

மறக்க நினைப்பன பல-அதனை மீறி
நினைவில் நின்றன சில

நினைக்கும் எண்ணங்கள் பல அதில்
நிலைக்கும் எண்ணங்கள் சில​-ஆனால்

நண்பா !!
உனது நினைவலைகள் மட்டும்
நினைக்கவில் இல்லை மறக்கவும் இல்லை

நில்லைது விட்டன என் மனதில்
                                                                                 இப்படிக்கு
                                                                                    அரவிந்த் யோகன்  

பள்ளி நட்பு

 

நண்பர்களே இது என் பத்தாம்  கவிதை ..
பிடித்து இருந்தால்
மறக்காமல் comment சொல்லவும்..!


பத்தாண்டு கல்வியில்

நாங்கள்  பெற்ற  இன்பமோ பல
துன்பமோ சில

நாங்கள் செய்த குறும்போ பல
பெற்ற தண்டனையோ சில

ஆசிரியர் மாணவர் மீது கொண்ட ஈடுபாடோ பல
மாணவர்கள் ஆசிரியர் மீது கொண்ட ஈடுபாடோ சில

ஆண்கள்  மீது கொண்ட நட்போ பல
அவர்கள் கொண்ட காதலோ  சில

நாங்கள் பெற்ற வெற்றியோ பல
தோல்வியோ சில

நாங்கள் தேர்வில் அடித்த பிட்டோ பல
ஆசிரியரிடம் மாறியதோ சில

அனால் நாங்கள் பள்ளி இறுதி தேர்வில் வெற்றி பெறுவோம்
இது உறுதி

மாணவர்களாகிய நாங்கள் எங்கு சென்றாலும்
எங்கள் நட்பு தொடரும் .
                                                                                  இப்படிக்கு
                                                                                    அரவிந்த் யோகன் 

கல்லூரி பிரிவு


மூன்றாண்டு கல்லூரி வாழ்வில் 

அன்பை மையப்படுத்தி 

நட்பை முன்னிலை படுத்தி

ஆற்றலோடு வாழ்ந்த எங்களுக்கு 

பிரிவு என்னும் பெரும் சோகம் !!

 இன்பமான பயணம்

நின்று போவதால் அதிர்ச்சி !!

காலம் என்பது எங்களை 

பிரிக்க வந்த எமன் 

இப்பொழுது பிரிகிறோம் நாங்கள் 

நம்பிக்கை உண்டு பாருங்கள் 

மீண்டும் சிந்திப்போம் 

நிச்சயம் ஒரு நாள் ..!!!

பள்ளி நினைவுகள்

 

நண்பர்களே இது என்னோட பத்தாம் வகுப்பு கவிதை
பிடித்து இருந்தால்
மறக்காமல் கமெண்ட் செய்யவும்


பள்ளி நாட்களில் நாங்கள் கண்ட இன்ப துன்பம்
என்றும் மறவாது
என்றும் நிலைத்து இருப்பது என்றும் அழியாதது

ஆண்கள் பெண்களிடம் பூத்த பூ
நட்பு என்னும் அழியா பூ

ஆசிரியர் மாணவரிடம் பூத்த பூ
அன்பு என்னும் அழகான பூ

பள்ளி மாணவர்களிடம் பூத்த பூ
நகைப்பு என்னும் நகைசுவை பூ

தலைமை ஆசிரயர் மற்றும் மாணவரிடம்
பூத்த பூ
வெறுப்பு என்ற வெந்த பூ

 இதை எல்லாம் கடந்த நாங்கள்
பள்ளி இறுதி நாளில்
நாங்கள் ஒன்றாக கூடிய வேளையில்

பிரிவு என்ற சோகம் வந்தது

நாங்கள் செய்த சேட்டைகளால்  பெற்ற
தண்டனையோ பல

அன்றெல்லாம் சிறிதும் வருந்தாத நாங்கள்
இன்று வருந்துகிறோம்

பெருகியது வெள்ளம்
ஒவ்வொரு மாணவரின் கண்களிலும்  

ஆனால் நாட்கள் உண்டு
என்றாவது ஒரு நாள் இணைவோம்

அது வரை நாங்கள் எங்கு இருந்தாலும்
எங்கள் நட்பு தொடரும்

இப்படிக்கு ,

நட்புடன் ,
அரவிந்த் யோகன்
.

நட்பும் காதலும்

ரகசியங்களை
பகிர்ந்து கொள்ளாத நட்பும்...
உரிமையை
எடுத்துக்கொள்ளாத காதலும்
உண்மையான உறவாக
இருக்க முடியாது...!! 

உண்மை காதலுக்காக

தோற்று போன ஒவ்வொரு உண்மை காதலுக்காக....!

அவள் அவனோடு அவளுடைய காதலை பகிர்ந்தாள்.....!

அதற்கு அவன் சொன்னான் ''என்னை மறந்துவிடு , என்னால் உன்னை காதலிக்க முடியாது, இதை வேறு யாரிடமும் போய் சொல்...''
என்று...!

இதை கேட்டதும் வருத்தப்பட்ட‌ அவள் ஒரு கடிதத்தை அவனின் கையில் கொடுத்தாள்...

''என் ஞாபகம் வரும் போது இந்த கடிதத்தை பிரித்து படியுங்க‌''
என்று சொல்லிவிட்டு ஒன்றும் பேசாமல் திரும்பி சென்றுவிட்டாள்...!

நாட்கள் பல கடந்தன.....
மெல்ல மெல்ல அவளுடைய காதலை புரிந்து கொண்டான் அவன்...!

அவளை பார்க்க விரும்பிய அவன்,
அவள் வரும் இடங்களுக்கு வந்து அவளுக்காக‌ காத்திருந்தான்...
அவளின் College வாசலில் காத்து நின்றான்...
அவளின் தோழிகளிடம் அவளை பற்றி விசாரித்தான்...
பின்னர் தான் தெரிந்து கொண்டான் அவள் திரும்பி வரமுடியாத இடத்தில் இருக்கிறாள் என்று...!
அன்று தான் அவள் கொடுத்த பழைய கடிதத்தை அவன் படித்து பார்த்தான்...

அதில் எழுதிய வார்த்தைகள் அவனின் இதயத்தை வெடிக்கச் செய்தது...

''உனக்காக துடித்த இதயம் வேறு யாருக்காகவும் துடிக்க வேண்டாம்''
அதை நெஞ்சோடு சேர்த்து வைத்து கண்ணீருடன் அழுதான்...!

ஆனால் அவளோ திரும்பி வர முடியாத‌ இடத்தில்...!! 


பிடித்து இருந்தால் லைக் அண்ட் கமேன்ன்ட் பண்ணவும் ... 

நம் நட்பு

  
புன்னகை பூவாய் என்தோட்டத்தில்
 வாடாமலராய் நம் நட்பு

மலர சூடும் மலரானாய்
நட்பெனும் உணர்விற்கு உயரிய மகுடமாய்....

நம்நலத்தில் தன்னலம் கருதாமால்
இதயத்தில் தொடரும் நம்நட்பு

அனுபவத்தால் உணர்கிறேன்
நான் வார்த்தைகளால் வரையறுக்கா நம்நட்பினை....

நாம் உருவாக்கும் புது உறவு
நல்நட்பாகிய புதிய தலைமுறை.... நட்பு

பெண்களின் காதல்

பெண்ணே...
உயிராக உன்னை நினைத்து...

அன்பாக பேசும் என்னிடத்தில்...
கோபம் கொள்கிறாய் காரணமின்றி...!

நான் பேசும் அன்பான வார்த்தைகளுக்கு...
பதில் தர மறுக்கிறாய்... !

பிடிக்கவில்லையா என்றால் ஆமாம் என்கிறாய்...
உன்னிடம் என் காதலை சொன்ன போதே...
நீ சொல்லி இருக்கலாம்... !

காலங்கள் கடந்து இன்று சொல்கிராயடி...
உனக்காக நான் காத்திருந்த...
மணித்துளிகள் பல நினைத்து பார்கிறேனடி...

மீண்டும் கிடைக்குமா நான் தவற விட்ட...
பொக்கிஷமான மணித்துளிகள்...

இனி என்னை கடக்கும் ஒவ்வொரு வினாடியும்...
முன்னேருவேனடி என் வாழ்வின் வெற்றிக்காக...

அழகிய வாழ்வினை வெல்வெனடி...
ஓர் நாள் உலகம் இல்லையெனும்...

என் சமுகம் என்னை திரும்பி பார்க்குமடி...
பெண்ணே நீயும் அப்போது திரும்பி பார்பாயடி என்னை...

அன்று என்னில் எதுவும் இருக்காது...
உன் நினைவுகள் எதுவுமே...

நீ என்னை வெறுத்த இந்த நிமிஷம்...
நான் மீண்டும் பிறந்தேனடி...

புதிய பூமியில் புதிய வானமாய்...
எப்படி தொடுவேனடி வாழ்வை...

பறிபேனடி பல வெற்றி கனிகளை...

என் வாழ்க்கையை உணர்த்திய உனக்கு...
நன்றி கோடிகள் பெண்ணே...

தொடரும் என் வாழ்வு வசந்தமாய்.....!!! 

நண்பன் வேண்டூம்

நட்புடன் வாழ
நண்பன் ஒருவன் வேண்டூம் ,

எப்போதும் கூட
அவன் என்னை தேட வேண்டூம் ,

தோல்வி ஒன்று வந்தால்
அவன் தோள் கொடுக்க வேண்டூம் ,

வெற்றி ஒன்று கண்டால்
என் தோல் தட்ட வேண்டூம்,

போகும் பாதை எங்கும் ஒன்றாய் நடக்க வேண்டூம் ,

என் உயிர் பிரியும் பொது கூட

அவன் என் அருகில் இருக்க வேண்டூம் !!

ஒரு காதல் கதை

ஒரு காதல் ஜோடிக்கு,
கடவுள் ஒரு நாற்காலியை அனுப்பி வைக்கிறார்.

அந்தநாற்காலியின் சிறப்பு அம்சம்,
அதில் அமர்ந்துக் கொண்டு பொய் சொன்னால்
சிவப்பு விளக்கு எரியும்.

உண்மையைச் சொன்னால் பச்சை விளக்கு எரியும்.
காதலி தன் காதலனை அதில் அமரச் சொன்னாள் .

அவன் அமர்ந்துதும் " நீ என்னை விரும்புகிறாயா?"
என்றுக் கேட்டாள்.

அவன் "ஆம்" என்று பதில் அளித்தான்.

உடனே சிவப்பு விளக்கு எரிந்தது.

காதலி உடனே, நீ பதற வேண்டாம்.
கடவுள்நாற்காலியில் ஏதோ தவறு செய்து விட்டார் போலும்.
 அதனால் தான் சிவப்பு விளக்கு எரிகிறது.

நாம் மீண்டும் முயற்சிக்கலாம் என்றாள்.
மீண்டும் " நீ என்னை விரும்புகிறாயா ? " என்றுக் கேட்டாள்.

அவனும் ஆம் என்று பதில் சொன்னான்.
இம்முறை பச்சை விளக்கு எரிந்தது.

நாற்காலியில் எந்த வித தவறும் இல்லை.
காதலன் முதலில் சொன்னது பொய் தான்.
இத்தனை நாட்களாக அவன் அவளை
உண்மையாக விரும்பவில்லை.

அவள் அவன் மீது
எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கிறாள்
என்பதை கண்ணால் பார்த்த அந்த நொடியிலிருந்து தான்
அவளை உண்மையாய் நேசிக்க ஆரம்பித்தான்.

அதனால் தான் இரண்டாம் முறை பச்சை விளக்கு எரிந்தது.
ஆகவே நீங்கள்
உங்கள் காதல் மீது கொண்ட நம்பிக்கை கொண்டால்
ஒரு தலை காதல் கூட ஒரு நாள் வெல்லும்...!

No comments: